ஐபிஎல் 4 தொடரின் வீரர்கள் ஏலம் 2வது நாளாக இன்றும் தொடருகிறது. இலங்கை வீரர் ஜெயசூர்யாவை வாங்க யாரும் முன்வரவில்லை. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய எல்.பாலாஜியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 லட்சம் டாலருக்கு வாங்கியுள்ளது.
நான்காவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கியது. அதிகபட்ச விலையுடன் கம்பீரை விலைக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
அதேசமயம், கங்குலி, ஜெயசூர்யா, பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் ஆகியோரை யாரும் வாங்காத நிலை ஏற்பட்டது.
இன்று 2வது நாளாக ஏலம் தொடருகிறது. இன்றைய ஏலத்தில், உமேஷ் யாதவை ஏழரை லட்சம் டாலருக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், டேணியல் கிறிஸ்டியானை 9 லட்சம் டாலருக்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் வாங்கின.
முனாப் படேலை 7 லட்சம் டாலருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த முறை ஆடிய எல்.பாலாஜியை 5 லட்சம் டாலருக்கு கொல்கத்தா விலைக்கு வாங்கியது.
இதுவரை விலை போகாத வீரர்கள் - சனத் ஜெயசூர்யா, மைக்கேல் லம்ப், முகம்மது கைப், சமர சில்வா, இயான் பெல், கைல் மில்ஸ், காலின் இங்க்ராம், மான்டி பனீசர், ரங்கன ஹெராத், பால் ஹாரிஸ், ஆகியோர். ஜெயசூர்யா கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்தவர் ஆவார்.
வினய் குமாரை கொச்சி அணி 4.75 லட்சம் டாலருக்கு வாங்கியது. அசோக் திண்டாவை 3.75 லட்சம் டாலருக்கு டெல்லி வாங்கியது.
ஷான் டெய்ட்டை 3 லட்சம் டாலருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது.
அவுஸ்திரேலியாவின் கிளின்ட் மெக்கேயை 1 லட்சத்து 10 ஆயிரம் டாலருக்கு மும்பை இந்தியன்ஸ் கடுமையாக போராடி பெற்றது.